செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2019 (16:37 IST)

பிரேமலதா வெரி டிஃப்ரெண்ட்: சைகை மூலம் ஓட்டு சேகரிப்பு

20 மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  

 
இதனால், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தங்கள் கட்சியின் அருமை பெருமைகளை பிரச்சாரம் செய்கிறார்களோ இல்லையோ, மற்ற கட்சிகளை குறை கூற மட்டும் மறப்பதே இல்லை. 
 
ஆனால், தேமுதிக பொருளாலர் பிரேமலதா பயங்கர டிஃப்ரெண்ட். ஆம், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
பிரச்சாரத்திற்கு 9 மணிக்கு வர வேண்டிய அவர், 10.15 மணிக்கு தாமதம்ஆக வந்தார். 10 மணிக்கு மேல் மைக் மூலம் வாக்கு சேகரிக்க கூடாது என்பதால், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் சைகை மூலம் வாக்கு சேகரித்தனர். அதாவது, தங்கள் கைகளை உயர்த்தி இரட்டை விரலை காட்டி வாக்கு கேட்டனர்.