1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:24 IST)

டம்மியான சுதீஷ்; ஆக்‌ஷன் எடுப்பாரா ஈபிஎஸ்? அப்செட்டில் பிரேமலதா!

அதிமுக கூட்டணியில் போராடி இணைந்த விஜயகாந்தின் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிடுகிறார். 
 
விஜயகாந்த் பிரச்சரத்தில் ஈடுப்படவில்லை, ஆனால், பிரேமலதா ரெஸ்ட் இல்லாமல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவின் அருமைகளையும், பாஜகவின் பெருமைகளையும், இடையில் தேமுதிகவின் சிறப்புகளையும் பிரச்சாரத்தில் தெளித்து விடுகிறார். 
 
என்னத்தான் பிரச்சாரத்தில் பந்தாவாக பேசினாலும், தனது தம்பி டம்மி ஆக்கப்பட்டுவிட்டானோ என அப்செட்டில் உள்ளாராம் பிரேமலதா. ஆம், தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 
அதனால், இங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள், வெற்றிக்காக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உடபட சேலம் மாவட்ட ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய அதிமுகவினர் படையெடுத்து பிராச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இதனால், தேமுதிக வேட்பாளர் சுதீஷ் பிரச்சாரத்தில் மந்த நிலை நிலவுகிறதாம். இதனால், நேற்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த போது இது குறித்து பிரேமலதா புகாராக அவர் காதில் ஓதியுள்ளார். 
 
இதை கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமியும், தேர்தல் பணியை தோய்வின்றி மேற்கொள்வதோடு, வெற்றிக்கு தேவையான அனைத்தும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளாராம்.