1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (19:31 IST)

மோடியிடம், எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும்: பொன்னார்

பிரதமர் நரேந்திர மோடியிடம், எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் தொகுதியில் வெற்றி பெற தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
அந்த வகையில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொகுதி முழுவதும் சூறாவளி பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றார்.
 
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட திருவட்டார் என்ற பகுதிகளில் அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் துணிச்சலான, தெளிவான முடிவுகளை எடுப்பதில் பிரதமர் நரேந்திர மோடியே வல்லவர் என்றும், அவரிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.