நீங்களே வச்சிட்டு; நீங்களே எடுத்துட்டு, நாங்க மாட்டுவோம்: ரெய்டு குறித்து தினகரன் பொளேர்

Last Updated: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (18:36 IST)
சின்னத்திற்காக தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட் என பெரும் சட்ட போராட்டங்களுக்கு பின்னர் மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ள தினகரனின் அமமுக, அதிமுக மற்றும் திமுகவிற்கு கடும் போட்டியாக் இருக்கும் என தெரிகிறது. 
 
திமுகவிற்கு கூட்ட பெரிய பாதிப்புகள் இருக்காது, ஆனால், அதிமுகவின் வாக்கு வங்கிகளை அமமுக நிச்சயம் பிரிக்கும் என தெரிகிறது. தினகரனின் வேட்பாளர்களுக்கு அதிமுகவிற்கு சவால் கொடுக்கும் வகையிலேயே உள்ளனர். 
 
இந்நிலையில், இன்று நீலகிரி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தினகரன், இடைத்தேர்தலை நிறுத்தவே மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த ரெய்டை நடத்தி வருகின்றன என பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, 
dinakaran
வருமான வரித்துறையை வைத்து ரெய்ட் நடத்தி 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது. 
 
ஆளும் கட்சி படுதோல்வி அடையும் என்பதால், குறிப்பாக எங்கள் வேட்பாளர்கள் மீதோ, அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீதோ, எங்கள் கட்சி நிர்வாகிகள் வீடுகளிலோ, அல்லது எங்கள் கட்சி பொறுப்பாளர்களின் வீடுகளிலோ, இவர்கள் போய் முன்னதாகவே பணத்தை வைத்துவிடுவார்கள்.
 
அதன் பிறகு எங்கள் ஆட்களை பிடித்து, தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்கலாம். உடனே தேர்தல் ஆணையமும் தேர்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்கலாம் என பேசி இப்படியும் இருக்களாமோ என சிந்திக்க வைத்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :