செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (11:11 IST)

தீ குளிச்சா செத்துபோயிருவ; போய் டீ குடி: டக்லைஃப் துரைமுருகன்

தேர்தல் வந்தாலே ரெய்ட் நடக்கும் என்பதும் கட்டாயம் ஆகிவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகவிலும் இது போன்ற அதிரடி ரெய்டுகள் நடைபெற்று வருகிறது. 
 
குறிப்பாக தமிழகத்தில், கடந்த சில நாட்களாக திமுக பொருளாலர்  துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
 
எனவே இது குறித்து விளக்கம் அளிக்க துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு கட்சியின் மூத்த உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தினால் கட்சியில் இருக்கும் மற்ற நபர்கள் பயந்துவிடுவார்கள் என நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் இப்போது மேலும் வலிமையாக இருக்கிறோம். 
அதிமுக - பாஜக கூட்டணிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. இதுபோன்று தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதால் யாருக்கு பலன் என்ற "அரசியல் அரிச்சுவடி" கூட தெரியாதவர்களாக இவர்கல் இருக்கிறார்கள் என பேசிக்கொண்டிருந்தார். 
 
அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டன் ஒருவன் தலைவா நான் தீ குளிக்கட்டுமா? சொல்லுங்க தலைவா, இப்பவே நான் தீ குளிக்க தயார் என கத்தினார். இதற்கு சற்றும் தளராத துரைமுருகன், தீக்குளிச்சா நீ செத்துப்போயிடுவ. தீ எல்லாம் குளிக்காத, போய் டீ குடிச்சிட்டு வேலையை பாரு என்று கேஸ்வலாக பதில் அளித்தார். 
 
இது போன்று நாசுக்காக பேசுவது துரைமுருகனுக்கு புதிதல்ல, இதில் அவர் எப்போதும் வல்லவர்தான்.