அடுத்த பிரதமர் மோடியும் இல்லை, ராகுலும் இல்லை: டிடிவி தினகரன்

modi
Last Modified செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (07:30 IST)
காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கும் வரும் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காது என்றும், அதனால் அடுத்த இந்திய பிரதமர் மோடியும் இல்லை ராகுல் காந்தியும் இல்லை என்றும், மாநில கட்சியை சேர்ந்த ஒருவரே அடுத்த பிரதமர் என்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றி அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வத்தை நேற்று ஆதரித்து பேசிய டிடிவி தினகரன்,' வரும் தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி உதவியுடன் மாநிலக் கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளதாகவும், அமமுக உள்பட மாநில கட்சிகளே அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

மோடி தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக கூட்டணியும், ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என திமுக கூட்டணியும் ஆணித்தரமாக கூறி வரும் நிலையில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று தாங்கள் கைகாட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என டிடிவி தினகரன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் தமிழகத்தில் உள்ள 39 எம்பிக்களுக்கு பெரும் பங்கு இருக்கும் என்பது மட்டும் உண்மையாகவுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :