அடுத்து ரெய்டில் சிக்க போவது யாரு? உலறிய அதிமுக அமைச்சர்

Last Updated: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (17:08 IST)
தமிழகத்தி பொருளாலர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற ரெய்ட் கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இந்த ரெய்ட் விவகாரம் பிரச்சார தீணியாக மாறியுள்ளது. 
 
இப்படி இருக்கையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்யாளர் சந்திப்பில் கூறிய செய்த மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியது பின்வருமாறு,
 
சினம் கொண்ட அதிமுக எனும் சிங்கத்திடம், திமுக என்ற மதம் கொண்ட யானை தோற்று ஓடும். திமுக கட்சிக்காரங்க வீட்டில் கட்டுக்கட்டா பணம் எடுத்திருக்கிறார்கள். கொள்ளையடித்த பணம் இருந்தால், கண்டிப்பாக வருமான வரித்துறையினர் சோதனை செய்யதான் செய்வார்கள். 
 
அடுத்து சாத்தூர் அமமுக வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் ரூ.40 கோடி பதுக்கி வைத்துள்ளார். அவர் வீட்டுக்கு எப்போது வருமான வரித்துறையினர் வந்து சோதனை செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :