1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
  4. Its important to drive like a womans virgin Seeman

பெண்களின் கற்பு போல ஓட்டும் முக்கியம் - சீமான்

Its
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து தேர்தல் அனைத்து கட்சிகளும் போட்டா போட்டி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இரு திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் படியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று தருமபுரியில் உள்ள அரூர்  பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. அப்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாள் ருக்மணி தேவியையும், அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திலீப் பாப்பிரட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான சதீஸ் ஆகியோருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் ஹட்ரோ கார்பன், நெடுவாசல்,விவசாயம் பாதிப்பு ஆகியற்றிற்கு தற்சமயம் ஆட்சியில் இருப்போர் ஒருமுறை கூட வந்து மக்களைப் பார்க்கவில்லை. ஒட்டுக்கு பணம் கொடுக்க வருவார்கள். அதனால் பணத்துக்கு ஓட்டுப்போட வேண்டாம். 
 
பெண்களுக்கு  கற்பு எவ்வளவு முக்கியமானதோ அதைப் போல ஓட்டும் மிகமுக்கியம். எனவே ஓட்டை விற்க வேண்டாம். இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்து வழக்கு: டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு