திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (16:22 IST)

50 லட்சத்தில் கார் டிரைவருக்கு வீடு வாங்கிக் கொடுத்த பிரபல நடிகை

பிரபல நடிகை ஆலியா பட் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது டிரைவர் மற்றும் உதவியாளருக்கு 50 லட்சம் மதிப்பில் வீடு வாங்கிக்கொடுத்துள்ளார்.
 
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் சமீபத்தில் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
 
பிறந்தநாளை முன்னிட்டு தனக்கு மிகவும் விஸ்வாசமாக இருந்த தன் கார் டிரைவர் மற்றும் உதவியாளருக்கு சொந்த வீடு வாங்க 50 லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்துள்ளார். அதை வைத்து அவர்கள் மும்பையில் புது வீடு வாங்கியுள்ளனர். ஆலியாவின் உதவி மனப்பான்மையை பலர் பாராட்டி வருகின்றனர்.