திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (07:41 IST)

தீபாவிடம் விருப்பமனு கொடுத்த பிரமுகர் யார் தெரியுமா?

தீபாவின் கட்சி என்றவுடன் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது அவருடைய கார் டிரைவர் ராஜாதான். கணவர் மாதவனைவிட கட்சி விஷயத்தில் தீபா, டிரைவர் ராஜாவை அதிகம் நம்புவதாகவும், அவரிடம் தான் பல முக்கிய ஆலோசனைகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் டிரைவர் ராஜாவை அவ்வபோது கட்சியில் இருந்து நீக்குவதும், பின் மீண்டும் சேர்ப்பதும் தீபாவின் வழக்கமாக இருந்து வருகிறது
 
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்து போட்டி என்று அறிவித்த தீபா, அதற்கான விருப்பமனுக்களையும் பெற்று வருகிறார். முதல் நாளே சுமார் 100 பேர் விருப்பமனுக்களை பெற்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் விருப்பமனுவை பெற்ற டிரைவர் ராஜா, தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கும்படி தீபாவிடமும் அவரது கணவர் மாதவனிடமும் கேட்டுக்கொண்டுள்ளாராம். அதிலும் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட டிரைவர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் தான் தீபாவும், அவரது கணவர் மாதவனும் போட்டியிட போகின்றார்களாம். சென்னையின் மூன்று தொகுதிகளும் தீபாவின் தேர்தல் பிரச்சாரத்தால் கலகலக்க போவது உறுதி என்றே அக்கட்சியின் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.