ரிலீசுக்கு முன்னரே 'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ்: தமிழ் ராக்கர்ஸ் அதகளம்

ner konda parvai
Last Modified செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (17:06 IST)
அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் சென்னையில் பத்திரிகையாளர் காண சிறப்பு காட்சியும், சிங்கப்பூரில் பிரிமியர் காட்சியும் இன்று திரையிடப்பட்டன. இன்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் இந்த படத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்

இந்த நிலையில் பத்திரிகையாளர் காட்சி மட்டும் சிறப்புக் காட்சியில் படம் பார்த்தவர்கள் இந்த படத்தின் காட்சியை வீடியோ எடுத்து தங்களது டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுடைய டுவிட்டர் பக்கத்தை டெலிட் செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை ரிலீஸ்க்கு முன்னரே தங்களது இணையதளத்தில் வெளியிட உள்ளதாகவும் சிங்கப்பூரில் சிறப்புக் காட்சியை திரையிட்ட படக்குழுவினருக்கு எங்களது நன்றி என்றும் அதகளமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்கிறது

இந்த ட்வீட்டுக்கு அஜித் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த படத்தை ரிலீசுக்கு முன்னரே தமிழ் ராக்கர்ஸ் வெளியிடுமா? அல்லது அஜித் ரசிகர்களை கடுப்பேற்ற தமிழ் ராக்கர்ஸ் பதிவு செய்த டுவீட்டா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :