1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (20:53 IST)

’தமிழ் ராக்கர்ஸ்க்கு’ ஆப்பு வைக்க சீனாவில் அதிரடி கண்டுபிடிப்பு ! வைரைல் தகவல்

தமிழ் சினிமாத்துறையினரின் மிகப்பெரிய கவலையாக இருப்பது பைரஸி. அதாவது சிறிய படம் பெரிய படம் என்றில்லாது எல்லா படங்களையும் சில மணி நேரத்தில் வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் வெளிடுவது, அல்லது படம் வெளிவருவற்கு முன்பே இணையதளத்தில் பதிவேற்றுவது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.
இதனால் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைத்துறையினரும் மிகுந்த மனவேதனையுடன் இருந்தனர். இந்நிலையில் இந்த பைரஸியை ஒழிக்க சீனா ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.
 
இதுகுறித்து செயல்முறை வீடியோவை பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில் சீனா தொழில்நுட்பக் அறிஞர்கள், infrared என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த திருட்டுத்தனமாக வீடியோ எடுப்பதை ஒழிக்க புதிய வழி கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால்.. நாம் கண்களால் திரையில் படத்தைப்  பார்க்குபோது எந்த எழுத்துக்களும் திரையில் இருக்காது. ஆனால் காமிராவில் ஷூட் செய்த பின்னர் அந்த வீடியோவை பார்க்கௌம் போது அதில் எழுத்துக்கள் , மற்றும் வாட்டர் மார்க், பைரஸி ப்ளாக்கர் என்று திரைமுழுவதும் தோன்றும் படி செய்துள்ளனர். .
சீனாவில் பைரஸியை ஒழிப்பதுபோன்று நம் நாட்டிலும் பைர்ஸியை ஒழிக்க வேண்டும் என்பதே சினைமாதுறையினரின் எதிர்பார்ப்பு.