வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:40 IST)

"இந்திய சினிமாவிலேயே நேர்கொண்ட பார்வைக்கு தான் இந்த ஸ்பெஷல்" தல வேற லெவல் மாஸ்!

அஜித் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. 


 
அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்தாக வெளிவரும் இப்படத்தை திருவிழா போல் கொண்டாட அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் தற்போது இன்னொரு ஸ்பெஷலாக ஒரு புது தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இந்தியாவின் முதல் ஆர்ஜிபி லேசர் வசதி கொண்ட புரொஜக்டரை நேர்கொண்ட பார்வை படத்திற்காக பிரபல திரையரங்கம்  முடிவிடுத்துள்ளது. 
 
ஆர்ஜிபி லேசர் வசதியில் படம் பார்க்கும் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்.  இந்திய சினிமாவிலிலேயே  முதல் லேசர் வசதி கொண்ட புரொஜக்டரில் நேர்கொண்ட பார்வை  படம் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.