1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2025 (14:15 IST)

அஞ்சான் ரி ரிலீஸில் சிறு மாற்றம்… புது வெர்ஷனைப் பார்த்த பிரபலங்கள்!

அஞ்சான் ரி ரிலீஸில் சிறு மாற்றம்… புது வெர்ஷனைப் பார்த்த பிரபலங்கள்!
சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் லிங்குசாமி இயக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியுடன் உருவாகி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால் அவரைப் பற்றி மீம்ஸ்களாகப் போட்டு கிழித்தெறிந்தனர். அந்த படத்தில் சறுக்கிய லிங்குசாமி இன்னமும் தலைதூக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமா கண்டிராத அளவுக்கு அந்த படத்தின் மீதும், இயக்குனர் லிங்குசாமியின் மீதும் ட்ரோல்கள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது 10 ஆண்டுகள் கழித்து ‘அஞ்சான்’ மீண்டும் படத்தொகுப்பு அரைமணிநேரம் அளவுக்குக் காட்சிகள் குறைக்கப்பட்டு ரி ரிலீஸ் செய்யும் வேலைகளை லிங்குசாமி மேற்கொண்டு வந்தார். கடந்த சில மாதங்களாகவே இந்த தகவல் பரவி வந்த நவம்பர் மாத தொடக்கத்தில் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது நவம்பர் 28 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதிதாக எடிட் செய்யப்பட்ட படத்தை சிவகுமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு லிங்குசாமி திரையிட்டுக் காட்டியுள்ளார்.