ரஜினி எதிர்ப்பை மறைக்க விஜய் வீட்டில் ரெய்டா?

ரஜினி எதிர்ப்பை மறைக்க விஜய் வீட்டில் ரெய்டா?
Last Modified புதன், 5 பிப்ரவரி 2020 (18:27 IST)
ரஜினி எதிர்ப்பை மறைக்க விஜய் வீட்டில் ரெய்டா?
தமிழக மக்களையும் தமிழக ஊடகங்களையும் திசைதிருப்ப ஒரு செய்தி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் போது அதைவிட இன்னொரு பரபரப்பான செய்தியை வெளியிட்டால் போதும் என்பதுதான் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களின் தந்திரமாக உள்ளது
இந்த நிலையில் திமுகவின் கையெழுத்து இயக்கம் பரபரப்பான செய்தியாகி கொண்டிருந்தபோது திடீரென ரஜினி இன்று காலை சிஏஏ, என்.ஆர்.சி குறித்து பேட்டியளித்து திமுகவின் கையெழுத்து இயக்க செய்தியை திசை திருப்பியதாக கூறப்படுகிறது.

அதேபோல் ரஜினியின் இன்றைய பேட்டியால் பெரும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இந்த செய்தியை மறக்கடிக்க தற்போது விஜய் வீட்டில் ரெய்டு செய்யப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இதேபோல் ஒவ்வொரு செய்தியையும் திசை திருப்ப இன்னொரு செய்தியை பரபரப்பாக
ஆட்சியாளர்கள் வெளியிட்டு முந்தைய பரபரப்பை மறக்கடித்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. எதிர்பார்த்தது போலவே தற்போது ஊடகங்களும் சமூக வலைதள பயனாளிகளும் கையெழுத்து இயக்க செய்தியையும், ரஜினிக்கு எதிரான செய்திகளை மறந்துவிட்டு தற்போது விஜய் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆட்சியாளர்களின் எண்ணம் ஈடேறி விட்டதாகவே கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :