புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (17:35 IST)

ஷூட்டிங்கை நிறுத்தி சென்னை அழைத்து வரப்படும் விஜய்: பிண்ணனி என்ன?

நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டு தற்போது சென்னை அழைத்து வரப்படவுள்ளார் என செய்திகள் வெளியானது. 
 
விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் படப்பிடிப்பு தளத்தில் விஜய்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனால், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 
 
விஜய்யை நேரில் சென்று விசாரித்ததோடு நிறுத்தாமல் அவரை தற்போது சென்னை அழைத்துவர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த விஷயம் தற்போது கோலிவுட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.