செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (15:50 IST)

அவர் கருத்துதான் எங்கள் கருத்து: ஒன்னுக்குள்ள ஒன்னான அதிமுக - ரஜினி!!

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது நல்ல விஷயம். இந்த விஷயத்தில் ரஜினியின் கருத்துதான் அதிமுகவின் கருத்தும் என ஜெயகுமார் பேசியுள்ளார். 

 
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இந்திய நாட்டிற்கு என்பிஆர் அவசியம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். அதேபோல சிஏஏவால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்னை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள். 
இருப்பினும் இஸ்லாமியர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக பீதி கிளப்பப்பட்டுள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்ம பூமி என இங்கேயே வாழும் இஸ்லாமியர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்?
 
அப்படி இஸ்லாமியர்களுக்கு எதிராக எதாவது நடந்தால் அவர்களுக்காக முதல் ஆளாக நானே வந்து நிற்பேன். அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்திற்காக இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என தூண்டிவிடுகிறார்கள் என பேசினார். 
 
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது நல்ல விஷயம். இந்த விஷயத்தில் ரஜினியின் கருத்துதான் அதிமுகவின் கருத்தும். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அவர்களுக்குப் பின்னால் நாங்கள் அனைவரும் சிறுபான்மையினர்களுக்கு ஆதரவாக செயல்படுவோம். 
 
மேலும், ஒரு சிறுபான்மையினருக்கு ஆபத்து என்றாலும் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் கூறியுள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்தின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.