வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (16:38 IST)

ரஜினிக்கு சூப்பர் ஐடியா கொடுத்த கார்த்தி சிதம்பரம்!!

ரஜினி வெளிப்படையாகவே பாஜகவில் சேர்ந்துவிடலாம் என கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். 
 
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இந்திய நாட்டிற்கு என்பிஆர் அவசியம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். அதேபோல சிஏஏவால் இந்தியாவில் உள்ள மக்களுக்கு பிரச்னை இல்லை என தெளிவாக கூறிவிட்டார்கள். 
 
இருப்பினும் இஸ்லாமியர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக பீதி கிளப்பப்பட்டுள்ளது. பிரிவினையின் போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்ம பூமி என இங்கேயே வாழும் இஸ்லாமியர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்? 
 
அப்படி இஸ்லாமியர்களுக்கு எதிராக எதாவது நடந்தால் அவர்களுக்காக முதல் ஆளாக நானே வந்து நிற்பேன். அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்திற்காக இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என தூண்டிவிடுகிறார்கள் என பேசினார். 
 
இந்நிலையில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பேச்சு பாஜக தலைவர்களின் பேச்சை ஒத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எனவே, வெளிப்படையாகவே ரஜினி, பாஜகவில் சேர்ந்துவிடலாம் என்று கூறியுள்ளார்.