தன்னுடன் சேர்ந்து நடிக்க மருமகனுக்குத் தடைபோட்ட மாமனார்

d
CM| Last Updated: வெள்ளி, 25 மே 2018 (20:31 IST)
தன்னுடன் சேர்ந்து நடிக்க மருமகனுக்கு மாமனார் தடைபோட்ட விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
உச்ச நட்சத்திரமான மாமனாரை வைத்து ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார் ஒல்லியான மருமகன். இந்தப் படத்தில், மாமனாரின் சின்ன வயது வேடத்தில் மருமகன் தான் நடிக்கிறார் என அந்த சமயத்தில் தகவல் வெளியானது. மருமகனுக்கும் அந்த ஆசை இருந்திருக்கிறது. ஆனால், மாமனார் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.
 
சின்ன வயது வேடத்தில்தான் நடிக்க முடியவில்லை, கெஸ்ட் ரோலிலாவது மாமனாருடன் ஒரு காட்சியில் சேர்ந்து நடிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார். இந்தத் தகவல் மாமனார் காதுக்குப் போக, ‘அவரும் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார். அவர் என்கூட கெஸ்ட் ரோலில் நடிப்பது நன்றாக இருக்காது’என்று சொல்லிவிட்டாராம் மாமனார்.
 


இதில் மேலும் படிக்கவும் :