1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 11 பிப்ரவரி 2026 (18:39 IST)

அந்த நடிகரை உஷார் பண்ண ட்ரை பண்ணேன்.. முடியல!.. கங்கனா ரணாவத் ஓப்பன்...

kangana
தமிழ், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கங்கன ரணாவத்.
தமிழில் ஜெயம் ரவி நடித்து வெளியான தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து தமிழில் அவர் நடிக்கவில்லை. அதன்பின் பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.

நடிகர் ஹிருத்திக் ரோஷன் விவாகரத்து பெற்றபின் ‘எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.. ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் என்னுடன் உறவில் இருக்க விரும்பினார். எனவே அந்த உறவிலிருந்து நான் விலகி விட்டேன்’ என பேட்டி கொடுத்திருந்தார்..

இப்படி அடிக்கடி ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவார். பாஜகவிலும் தன்னை இணைத்துக் கொண்டு பதவிகளை வாங்கினார். சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. பாலிவுட்டில் துரந்தர் என்கிற படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டிருக்கிறது.

இந்த படத்தின் மூலம் நடிகர் அக்‌ஷய் கண்ணா மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் அக்சய் கண்ணாவிடம் முதலில் பேச முடிகின்றேன்.. அதன் பின் அவரை அவரை கவர்ந்திழுக்க Flirt செய்தேன். ஆனால் அவர் என்னை கண்டு கொள்ளவே இல்லை. அவ்வளவு ஏன்? அவர் என்னை பார்க்கவே இல்லை’ என கங்கனா ரனாவத் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..