வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 11 பிப்ரவரி 2026 (17:27 IST)

மார்பக நீக்க அறுவை சிகிச்சை செய்து 13 ஆண்டு ஆகிவிட்டது.. இப்போது ரகசியத்தை உடைத்த ஏஞ்சலினா ஜோலி..!

Angelina Jolie
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, தனது ஆரோக்கியம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்து அண்மையில் பகிர்ந்துள்ள கருத்துக்கள் அனைவரையும் நெகிழ செய்துள்ளன. 
 
2013-ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோய் அபாயத்தை தவிர்க்க 'மார்பக நீக்க அறுவை சிகிச்சை' செய்துகொண்ட நடிகை ஏஞ்சலினா ஜோலி, தனது உடலில் உள்ள அந்த தழும்புகளை மறைக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
"நான் குறையில்லாத வாழ்க்கையை விரும்புபவள் அல்ல; தழும்புகள் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சிகள்" என்று அவர் கூறியுள்ளார். தனது தாயை இளம் வயதிலேயே புற்றுநோயால் இழந்த ஏஞ்சலினா, தனது பிள்ளைகளுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் துணிச்சலான முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார். 
 
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு 87 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தது. "என் தழும்புகள் நான் என் குழந்தைகளுக்காக எடுத்த முடிவின் அடையாளம், அவற்றை நான் நேசிக்கிறேன்" என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva