1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: புதன், 11 பிப்ரவரி 2026 (18:00 IST)

ஜனநாயகன் தேர்தலுக்கு பின்னரே ரிலீஸ்?!.. என்னப்பா சொல்றீங்க?!..

jananayagan
ஹெச்.வினோத் இயக்கத்தில் ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் விஜய் நடித்து உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த மாதம் 9ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கையில் சிக்கியதால் படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. படத்தின் ரிலீசுக்கு 3 நாட்களுக்கு முன்பு மறுதணிக்கை செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதிலேயே ஒரு மாத காலம் ஓடிவிட்டது..

தற்போது வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர். விரைவில் படம் மறுத்தணிக்கை செய்யவிருக்கிறார்கள். அதேநேரம் அதிகாரிகள் எப்போது படம் பார்த்து எப்போது சான்றிதல் கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை. விரைவில் அது நடந்தால் இந்த மாதம் 19 அல்லது 20, நடக்கவில்லையென்றால் இந்த மாதம் 27ம் தேதி என இந்த மூன்று தேதியில் ஏதேனும் ஒரு தேதியில் ஜனநாயகன் வெளியாக வாய்ப்புண்டு. ஆனால் சான்றிதழை கொடுக்கவில்லை என்றால் படம் இந்த மாதம் வெளியாகாது..

மேலும் மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும்.. ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும்.. எனவே இந்த இரண்டு மாதங்களில் படத்தை வெளியிட்டால் எதிர்பார்த்த வசூலை பெற முடியாது.. எனவே கொடை விடுமுறையான மே மாதத்தில் தான் படம் ரிலீஸ் ஆக வாய்ப்புண்டு. சில விநியோகஸ்தர்களும் இதையே விரும்புவதாக தெரிகிறது. தயாரிப்பாளரும், விஜயும் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்..