1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 22 மே 2018 (18:51 IST)

ஸ்டெர்லைட் போராட்டம் ; தமிழக அரசே பொறுப்பு : ரஜினிகாந்த் கண்டிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.

 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.

 
இந்நிலையில், இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் “மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழகஅரசே பொறுப்பு” என பதிவிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரம் பற்றி ரஜினிகாந்த் கருத்து கூறவில்லை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து கூறி வந்த நிலையில் அவர் இந்த பதிவை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.