வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 11 பிப்ரவரி 2026 (21:16 IST)

சும்மா இருந்த சூர்யாவை சொறிஞ்சிவிட்ட ராதிகா!.. ஜோதிகாவை காதலிக்க இவர்தான் காரணம்!...

suriya jyotika
திரையுலகில் சூர்யா-ஜோதிகா ஒரு நட்சத்திர ஜோடியாகவே திரையுலகில் பார்க்கப்படுகிறார்கள்.
திரையுலகில் பல நடிகர்கள், நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் அது பல ஆண்டுகள் நீடிக்கவில்லை. அதில் பல ஜோடிகள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ஆனால் சூர்யா - ஜோதிகா ஒரு சிறந்த தம்பதியாக திரையுலகில் வலம் வருகிறார்கள்..

சூர்யா சினிமாக்கு வந்த புதிதில் அவரின் படங்களில் தொடர்ந்து நடித்தவர் ஜோதிகா. அதனாலோ என்னவோ இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு சில வருடங்கள் காத்திருந்து சிவக்குமாரின் சம்மதம் பெற்று இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்..

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சூர்யாவின் அப்பா சிவக்குமார் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார். சூர்யா உயிரிலே கலந்தது படத்தில் நடித்த போது அந்த படத்தில் நடித்த ராதிகா தனியாக இருந்த சூர்யாவிடம் சென்று ‘ஏன் இப்படி தனியாக இருக்கிறாய்? ஜோதிகாவுடன் பேசு பேசு’ என சொல்லிக் கொண்டே இருந்தார். அதன் பின்னர்தான் சூர்யாவும் ஜோதிகாவுடன் பேச தொடங்கினார். எனவே அவரின் காதல் திருமணத்திற்கு ராதிகாதான் காரணம்’ என அவர் கூறியிருக்கிறார்..

மேலும் பல படங்களில் பல கதாநாயகிகளை காதலிப்பது போல நடித்திருக்கிறேன்.. நான் ஏன் என் மகன் காதலுக்கு தடை சொல்ல போகிறேன்?’ எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்..