1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvs srinivasan daughter lakshmi sent notice to father

சொத்த பிரிச்சி கொடுங்க!.. TVS சீனிவாசனுக்கு மகள் லட்சுமி நோட்டீஸ்!...

tvs srinivasan
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மற்ற பழமையான தொழில் நிறுவனம் டி.வி.எஸ் குரூப்.
1911ம் வருடம் டிவி சுந்தரம் ஐயங்கார் என்பவரால் மதுரையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் முதன்மை தலைமையகம் மதுரையிலும், சர்வதேச தலைமையகம் சென்னையிலும் தற்போது இயங்குகிறது.

இருசக்கர வாகன வாகனங்கள், உற்பத்தி வாகன உதிரி பாகங்கள், மோட்டார் வாகன விற்பனை, தளவாடங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் என பல துறைகளிலும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தற்போது TVS நிறுவன குழுமத்தின் தலைவராக சீனிவாசன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது சொத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என சீனிவாசனின் மகள் லட்சுமி தந்தைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். சட்டப்படி தந்தை வழி சொத்துக்களில் மகன்களுக்கு நிகரான உரிமை தனக்கும் உண்டு எனக் கூறி TVS Holdings, TVS Motors, TVS Credit உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை பிரித்து தர கோரியுள்ளார். லட்சுமிக்கு அவரின் தாய் மல்லிகா சீனிவாசனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பதவி இழக்கும் எ.வ.வேலு, முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.. திமுகவில் அதிரடி மாற்றமா?