1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ajith may the reason for cm vijay announcement on motor sports

நண்பர் அஜித்துக்காக விஜய் செய்த சம்பவம்!.. மோட்டார் ஸ்போர்ட்ஸ் அறிவிக்கப்பட்டதன் பின்னணி?!..

ajith vijay
நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ‘தமிழ்நாட்டு இளைஞர்களிடம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும்’ என அவர் அறிவித்தார்.

அதோடு ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 போன்ற பன்னாட்டு பந்தயங்களை தமிழகத்தில் நடத்தும் வகையில் சர்வதேச தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்குவதோடு தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றுவதே இதன் நோக்கம் எனக் கூறியிருந்தார்..

இதையடுத்து தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அஜித்குமார் ‘தமிழ்நாட்டில் பிரத்யோகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.. தற்போது மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன வார்த்தைகளை சட்டையை மாற்றி இவ்வாறு சொல்கிறேன்.. ‘One Small step by the Tamilnadu Government, one giant leap for Indian motorsports' என அறிக்கை வெளியிட்டிருந்தார்..

நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாகவே மோட்டார்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார். துபாய், ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர் உள்ள பல நாடுகளுக்கும் சென்று கார் ரேஸ் பந்தய போட்டிகளில் விளையாடி வருகிறார். தமிழக இளைஞர்களிடம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.. அதுவே என் நோக்கம்.. மோட்டார் ஸ்போர்ட்ஸை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே என் நோக்கம் என அஜித் தொடர்ந்து கூறி வந்தார். எனவே அதை மனதில் வைத்துதான் நண்பர் அஜித்திற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நேபாள வெள்ளம்.. 9 நாட்களுக்கு பின் 2 பேர் சுரங்கத்தில் இருந்து உயிருடன் மீட்பு.. இன்னும் சிலர் இருக்கலாம் என தகவல்...