1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. special bus will be arranged for thee days leave

3 நாட்கள் தொடர் விடுமுறை!.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!..

bus
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை(செப். 3) 910 பேருந்துகளும் வெள்ளிக்கிழமை (செப். 4) 740 பேருந்துகளும், சனிக்கிழமை (ஆக. 22) 880 பேருந்துகளும் இயக்கப்படும்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 115 பேருந்துகளும், சனிக்கிழமை 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஒசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 95 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) 805 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்’ என கூறப்பட்டிருக்கிறது. மொத்தமாக 4,260 சிறப்புப் பேருந்துகள் இயக்கக்கப்டும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
திடீரென சட்டப்பேரவைக்கு வந்த இன்பநிதி.. என்ன காரணம்?