1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:33 IST)

இனி லேண்ட்லைன் மூலமாகவும் வாட்ஸ் ஆப் இயக்கலாம்… அதிரடி அறிவிப்பு!

வாட்ஸ் ஆப் செயலியை இனி லேண்ட்லைன் எண்ணை இணைத்து அதன் மூலமாகவும் இயக்கலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் என்பது நவீன் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. இந்த செயலியை நாம் இயக்க, நமது மொபைல் எண் தேவை. ஆனால் வணிக சம்மந்தமாக இந்த செயலியை இயக்குபவர்களுக்கு இனி வாட்ஸ் ஆப்பை லேண்ட் லைன் எண் மூலமாகவும் இயக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை நாம் பெறுவதற்கு வழக்கமாக நாம் செய்யும் வழுமுறைகளைப் பின்பற்றினால் போதும். ஆனால் மொபைல் நம்பர் உள்ளிடும் இடத்தில் மட்டும் லேண்ட் லைன் நம்பரை உள்ளிடவேண்டும்.