பேஸ்புக் & வாட்ஸ் ஆப் பயன்படுத்தக் கூடாது – இளைஞருக்கு நூதன நிபந்தனைகளுடன் ஜாமீன்!
கடைக்காரர் ஒருவரை தாக்கி சிறையில் இருந்த மாணவருக்கு நூதனமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரேந்திர தியாகி கடைக்காரர் ஒருவரை தாக்கி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதில் தான் சமீபத்தில் 12 ஆம் வகுப்பை 75 சதவீத மதிப்பெண்களுடன் முடித்துள்ளதாகவும் விரைவில் நட்க்க இருக்கும் வேளாண் கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வுக்கு தயாராகவேண்டும் எனவும் அதில் ஜாமீன் கேட்டு இருந்தார்.
இதையடுத்து நீதிபதி அவருக்கு சில விசித்திரமான நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கினார். அதில் ‘இரண்டு மாதங்களுக்கு பேஸ்பு மற்றும் வாட்ஸ் ஆப் உள்ளிய்ட்ட எந்த வொரு சமூகவலைதளத்திலும் இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். மேலும் இந்த ஜாமீன் நாட்களை தேர்வுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால் இந்த நிபந்தனை விதித்ததாகவும் கூறியுள்ளார்.