யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!
தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் விஜய பிரபாகரனின் 34-வது பிறந்தநாள் விழா இன்று தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார்.
விமான சிக்கலால் விஜய பிரபாகரன் மும்பையில் இருந்து இன்னும் சென்னை வந்து சேரவில்லை என்று தெரிவித்த அவர், விரைவில் வந்துவிடுவார் என்றார். மேலும், டிசம்பர் 28-ல் கேப்டன் விஜயகாந்தின் குரு பூஜை நடைபெற உள்ளதாகவும், ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கவிருக்கும் மாநாடுதான் கட்சியின் அடுத்த இலக்கு என்றும் பிரேமலதா அறிவித்தார்.
இந்த மாநாட்டில், கட்சியின் கூட்டணி குறித்த நல்ல அறிவிப்பு நிச்சயமாக வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள கட்சிகள் அனைத்தும் தேமுதிகவுக்கு தோழமைதான் என்றாலும், கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார்.
தேர்தலுக்காக கடந்த ஒரு வருடமாகக் கழக நிர்வாகிகள் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 68,000 பூத்களிலும் பூத் கமிட்டிகள் அமைத்து தயாராக இருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்தார். 234 தொகுதிகளும் தங்கள் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
Edited by Siva