கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் இன்று மாலை யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். இதில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர்.
பல மாதங்கள் திட்டமிட்டு நடந்ததாக கருதப்படும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு ஒரு நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்; மற்றொருவர் சுடப்பட்டு, சிகிச்சைக்காக காவல் கட்டுப்பாட்டில் உள்ளார். வெடிபொருள் தேடுதல் வேட்டையும் தொடர்கிறது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.
பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இச்சம்பவத்தை கண்டித்ததுடன், பொதுமக்கள் காவல்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்தினார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிட்னியின் முக்கிய சுற்றுலாத் தலமான போண்டி கடற்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
Edited by Siva