திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (09:54 IST)

வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து நீக்கப்பட்ட ரெய்னா! சி எஸ் கே அதிரடி!!

சென்னை அணியின் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை தல தோனி என்றால் தளப்தி ரெய்னாதான். தோனியின் ஓய்வுக்குப் பின் அணியை வழிநடத்த போவதே அவர்தான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் , துபாயில் பயிற்சிக்காக சென்றிருந்த ரெய்னா திடீரென இந்தியா கிளம்பி வந்தார்.

இதற்குக் காரணமாக இந்தியாவில் உள்ள அவரது மாமா ஒருவர் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே காரணமில்லை என சொல்லப்படுகிறது. ரெய்னாவுக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தோனிக்கு கொடுத்தது போன்ற  ஒரு அறையை ரெய்னா கேட்டதாகவும், நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்காத‌தால் ரெய்னா இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மனக்கசப்பை மறந்து ரெய்னா இப்போது அணிக்குள் திரும்ப பயிற்சியாளர் பிளமிங் மூலமாக முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அணி நிர்வாகம் இப்போது அதிரடியாக சி எஸ் கே அணியின் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து ரெய்னாவை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரெய்னா மீண்டும் அணிக்குள் திரும்புவது கடினம் என சொல்லப்படுகிறது.