செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 23 ஜனவரி 2019 (20:08 IST)

டிவி சேனல்களுக்கு புதிய கட்டணம் ...கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் எடுத்த முடிவு ...

இந்தியாவில் டிவி சேனல்களுக்கு பஞ்சமில்லை. மிக அதிமகமான சேனல்கள் இருக்கின்றன. இந்நிலையில் டிராயின்  புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் பிப்ரவரி 10 ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக கோவை மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் டிடி.ஹெச் சேவை கட்டணம் பற்றி சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை விட்டது. அதில் வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ. 153.40 கட்டணத்திற்குப் கொடுக்கப்போவதாக செய்திகள் வெளியானது.
 
அதான்வது புதிய கட்டணம் ரூ.130 ஆகும். அதற்கான ஜிஎஸ்டி சேர்த்து மொத்தம் கட்டணம் ரூ. 154 என்று தெரிகிறது. இப்புதிய அறிவிப்பால் 100 சேனல்களை வரும் (ஜனவரி )31 ஆம் தேதிக்குள் தேர்வு செய்யவேண்டும். பின்னர் பயனாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கு மாத்திடம் கட்டணம்செலுத்தினால் போதும் என் தெரிவித்திருந்தது.
 
எனவே இப்புதிய விதிமுறைகள் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாகும் நிலையில் டிராயின் புதிய கட்டண முறைகளுக்கு கேபிள் டிவி ஆப்பட்டர்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் டிராயின் இப்புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியாகின்றன.