திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Updated : செவ்வாய், 6 ஜனவரி 2026 (15:16 IST)

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

vijay
கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் மதியம் 12:30 மணிக்கு கரூர் செல்வதாக அறிவிக்கப்பட்டு இரவு 7.30 மணிக்குதான் அங்கு சென்றார். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கூட்டத்தில் சிக்கி பெண்கள்,குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பின்னணியில் திமுக இருக்கிறது என தவெகவினரும், தவெக நிர்வாகிகள் சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என திமுகவினரும் தொடர்ந்து புகார் சொன்னார்கள்.

ஒருபக்கம், இதுபற்றி விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என சொல்லி உச்சநீதிமன்றம் சென்ற தவெக சிபிஐ விசாரணை கேட்டது .அதற்கு நீதிமன்றமும் அதற்கு ஒப்புக்கொண்டது.

ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனே, நிர்மல் குமார், கரூர் மாவட்ட உயர் காவல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் என பலருக்கும் சம்மன் அனுப்பி டெல்லிக்கு நேரில் வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில்தான் தவெக தலைவர் விஜய்க்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

vijay

வருகிற 12-ம் தேதி அவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் விசாரணை நடந்தபோது ‘என்னையும் அழைப்பார்களா?’ என அவர்களிடம் விஜய் கேட்டதாகவும், அதற்கு ‘உங்கள் அழைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது’ என அவர்கள் சொன்னதாகவும் செய்திகள் கசிந்தது.

விஜய் வருகிற 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றாலோ அல்லது கால அவகாசம் கேட்டாலோ கண்டிப்பாக இது அவருக்கு நெகட்டிவாக திரும்பும். இவர்தான் சிபிஐ விசாரணை கேட்டார்.. இவரே அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என திமுகவினர் பேசுவார்கள்.

நேரில் சென்றால் சிபை அதிகாரிகள் விஜயை கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். முக்கியமாக காலை 8:30 மணிக்கு நாமக்கல்லில் நீங்கள் பேசுகிறீர்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், காலை 8 மணிக்குதான் சென்னையிலிருந்தே கிளம்பினீர்கள் ஏன்?..  மதியம் 12.30 மணிக்கு கரூர் என அறிவித்து விட்டு இரவு 7.30 மணிக்கு ஏன் சென்றீர்கள்?.. உங்களை வழிநடத்தியது யார்?.. மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரை விட்டுக்கொண்டிருந்தபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?.. உங்களுக்கு யாரும் எதுவுமே சொல்லவில்லையா? பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்காமல் ஏன் அங்கிருந்து கிளம்பி சென்றீர்கள்?.. என்பது உள்ளிட்ட பல கேள்விகளை கேட்பார்கள். எனவே விஜய் எப்படி சமாளிக்க போகிறார் என்பது தெரியவில்லை.