வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 ஜனவரி 2019 (11:34 IST)

ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கலாமா? வேண்டாமா? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உள்ளது. இதில் 50 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய நினைவிடம் கட்ட அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவது சரியானது அல்ல என கூறி வழக்கறிஞர் ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராவணன், ராஜமாணிக்கம், சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ குற்றவாளி என அவர் இறந்த பின்னரே அறிவிக்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும்போது குற்றவாளி அல்ல. எனவே தமிழக அரசு ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான செயல் கிடையாது. அரசின் நிதியில் நினைவிடம் அமைக்க எந்த தடையும் கிடையாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.