1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (14:59 IST)

மே மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடிவு?

வரும் மே மாதம் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.


 
நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடந்தது. இதில் விஷால் அணியினர் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 வருட பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதமே முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் பொதுக்குழுவை கூட்டி நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைத்தனர்.
 
தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. தரைதளமும் 3 மாடிகளும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 
அலுவலக அறைகள், கலை அரங்கம், மாநாட்டு கூடம், திருமண மண்டபம், உடற் பயிற்சி கூடம், நடன பயிற்சி அரங்கம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. ஓரிரு மாதங்களில் கட்டுமான பணிகளை முடியும் என தெரிகிறது.  
 
 மே அல்லது ஜூன் மாதம் திறப்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. 
 
இந்தநிலையில் வருகிற மே மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.