ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (21:47 IST)

பொதுமக்கள் விரும்பிய சேனல்களை தேர்ந்தெடுக்க கால அவகாசம் ஜன.31வரை நீட்டிப்பு!

புதிய கேபிள் டி.வி. ஒழுங்குமுறை சட்டம்,இன்று) முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.



ஆனால் திடீரென  பிப்ரவரி 1–ந் தேதிக்கு ‘டிராய்’ தள்ளி வைத்துள்ளது. இதனால், பொதுமக்கள் தாங்கள் விரும்பிய சேனல்களை தேர்ந்தெடுக்க கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
 
இந்த நடைமுறையால், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்யலாம். இதனால், தாங்கள் பார்க்காத சேனல்களுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்துவதில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள். அவர்களின் கேபிள் கட்டண செலவு குறையும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில்  ‘டிராய்’ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில்,  இந்த புதிய அறிவிப்பில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்ய ஜனவரி 31–ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதுவரை, தற்போதைய டி.டி.எச். பிளான்கள் அனைத்தும் அப்படியே நீடிக்கும். எம்.எஸ்.ஓ.க்களுக்கு எந்த சேனல் நிர்வாகமும் சிக்னலை துண்டிக்கக்கூடாது. என கூறப்பட்டுள்ளது.