ஒரே விலைதான்.. ஆனா எது பெஸ்ட்டு? Samsung Galaxy F54 Vs Motorola Edge 40!
சாம்சங் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள Samsung Galaxy F54 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும், மொட்டொரோலா நிறுவனத்தின் Motorola Edge 40 ஸ்மார்ட்போனும் கிட்டத்தட்ட ஒரே சிறப்பம்சத்தை கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் விதவிதமான 5ஜி ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் Samsung Galaxy F54 மற்றும் Motorola Edge 40 ஆகிய 5ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கிட்டத்தட்ட ஒரே சிறப்பம்சம், விலை கொண்டிருக்கிறது.
Samsung Galaxy F54 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆனால் Motorola Edge 40-ல் 6.55 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது சாம்சங்குடன் ஒப்பிடும்போது கொஞ்சம் சிறியது. Samsung Galaxy F54 வழக்கமான தனது ப்ரத்யேக Exynos 1380 சிப்செட்டில் செயல்படுகிறது. Motorola Edge 40 பிரபலமான டைமென்சிட்டி 8020 சிப்செட்டை கொண்டுள்ளது.
கேமரா குவாலிட்டியில் Samsung Galaxy F54 மாடலில் 108 எம்.பி + 8 எம்.பி + 2 எம்.பி ட்ரிப்பிள் கேமரா உள்ளது. ஆனால் Motorola Edge 40 மாடலில் 50 எம்.பி + 13 எம்.பி டூவல் கேமரா மட்டுமே உள்ளது. கேமரா குவாலிட்டியில் சாம்சங் சிறப்பாக உள்ளது.
Samsung Galaxy F54 மற்றும் Motorola Edge 40 இரண்டு மாடல்களிலும் 32 எம்.பி முன்பக்க செல்பி கேமரா உள்ளது. இரண்டுமே ஆண்ட்ராய்டு 13-ஐ தான் இயங்குதளமாக கொண்டுள்ளன.
Samsung Galaxy F54 மாடலில் மெமரி கார்ட் ஸ்லாட் உள்ளது. ஆனால் வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் ரெசிஸ்டண்ட் அம்சங்கள் இல்லை. Motorola Edge 40 மாடலில் மெமரி கார்ட் ஸ்லாட் இல்லை. ஆனால் வாட்டர் ரெசிஸ்டண்ட், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.
Samsung Galaxy F54 மற்றும் Motorola Edge 40 இரண்டு மாடல்களுமே 8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டெர்னல் மெமரியை கொண்டுள்ளது.
Samsung Galaxy F54 ஸ்மார்ட்போன் 6000 mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. Motorola Edge 40 ஸ்மார்ட்போன் 4400 mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது.
கேமரா விரும்புகளுக்கு Samsung Galaxy F54 சிறப்பான ஸ்மார்ட்போனாக இருந்தாலும், மீடியாடெக் ப்ராசஸர், 2.6 GHz ஆக்டாகோர் ப்ராசஸர் கொண்ட Motorola Edge 40 வேகமான பயன்பாட்டுக்கு, கேம் விளையாட சிறந்த ஒன்றாக இருக்கும்.
Samsung Galaxy F54 மற்றும் Motorola Edge 40 இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையுமே ரூ.29,999 ஆக உள்ளது.
Edit by Prasanth.K