ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (16:03 IST)

பக்காவான அம்சங்களுடன் வெளியானது Vivo V29 Lite! – சிறப்பம்சங்கள் என்ன?

Vivo V29 Lite 5G
விவோ நிறுவனத்தின் புத்தம் புதிய Vivo V29 Lite 5ஜி ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையில் பல நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன. விவோவும் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது தனது புதிய மாடலான Vivo V29 Lite ஸ்மார்ட்போனை செக் குடியரசில் விவோ வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனைக்கு வர உள்ளது.

சிறப்பம்சங்களை பொறுத்த வரை விவோவின் முந்தைய மாடலான Vivo Y78 5G யுடன் ஒப்பிடும் வகையில் இணையான சிறப்பம்சங்கள் இந்த Vivo V29 Lite மாடலிலும் உள்ளது.

Vivo V29 Lite 5G


Vivo V29 Lite 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
  • 6.78 இன்ச் அமோலெட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 சிப்செட்
  • 2.2 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13, ஃபண்டச் ஓஎஸ்
  • 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டர்னெல் மெமரி
  • 64 எம்.பி + 2 எம்.பி + 2 எம்.பி OIS ட்ரிப்பிள் கேமரா
  • 16 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 44W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Vivo V29 Lite 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும்போது இதன் விலை ரூ.24,990 ஆக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

Edit by Prasanth.K