ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (16:01 IST)

பக்காவான கேமரா.. பளிங்கு மாதிரி படம் தெரியும்! – Samsung Galaxy F54 5G முன்பதிவு ஆரம்பம்!

samsung galaxy f54 5g
சாம்சங் நிறுவனத்தின் புதிய Samsung Galaxy F54 5G இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நிலையில் அதற்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளது.



ஸ்மார்ட்போன்களில் தற்போது கேமிங், கேமரா உள்ளிட்ட குறிப்பிட்ட வசதிகளை பார்த்து பயனாளர்கள் வாங்க தொடங்கியுள்ளனர். நல்ல தரத்தில் கேமரா உள்ள ஸ்மார்ட்போன்கள் என்றுமே பயனாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறது. அப்படி சிறப்பான கேமரா அம்சங்களுடன் வெளியாகியுள்ளது Samsung Galaxy F54.

Samsung Galaxy F54 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

samsung galaxy f54

  • 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் ப்ளஸ் ஸ்க்ரீன்
  • சாம்சங் எக்ஸினோஸ் 1380 சிப்செட், மாலி G68 MP5 ஜிபியூ
  • 2.4 GHz ஆக்டோகோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13, One UI 5.1
  • 8 ஜிபி ரேம், 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 1TB வரை நீட்டிக்கக்கூடிய மெமரி கார்டு ஸ்லாட்
  • 108 எம்.பி + 8 எம்.பி + 2 எம்.பி ட்ரிப்பிள் OIS கேமரா
  • 32 எம்.பி முன்பக்க செல்பி கேமரா
  • 6000 mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங்

சமீபமாக OIS கேமராக்கள் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் 108 மெகா பிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. Nightography மற்றும் No shake camera வசதிகள் உள்ளது இந்த Samsung Galaxy F54 ஸ்மார்ட்போனின் சிறப்பு. மேலும் 6000 mAh பேட்டரி உள்ளதால் இதன் எடை 200 கிராம் வரை இருக்கும்.

samsung galaxy f54


இந்த Samsung Galaxy F54 5G ஸ்மார்ட்போன் மெட்டியர் ப்ளூ, ஸ்டார் டஸ்ட் சில்வர் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த Samsung Galaxy F54 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999. ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் தளத்தில் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் ஜூன் 12ம் தேதி இந்த Samsung Galaxy F54 5G விற்பனைக்கு வருகிறது.

Edit by Prasanth.k