1. செய்திகள்
 2. தகவல் தொழில்நுட்பம்
 3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 மே 2023 (15:50 IST)

இவ்ளோ சிறப்பம்சம் இருக்கு.. விலை இவ்ளோதானா? – அசத்தும் Tecno Camon 20 Series!

Tecno Camon 20 series
இந்தியாவில் பிரபல நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது Tecno நிறுவனம்.இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏராளமான 5ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. குறைந்த விலையில் வெளியாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் அதிகமான ரேம் மற்றும் ஸ்டோரேஜ் இருப்பதில்லை.

ஆனால் தற்போது Tecno வெளியிட்டுள்ள புதிய Tecno Camon 20 Series ஸ்மார்ட்போன்கள் 5ஜி வசதியுடன் ரேம், ஸ்டோரேஜூம் அதிகமாக கொண்டு வெளியாகியுள்ளது. Tecno Camon 20 Series –ல் வெளியாகியுள்ள Tecno Camon 20, Tecno Camon 20 Pro 5G மற்றும் Tecno Camon 20 Premier உள்ளிட்ட மாடல்களின் சிறப்பம்சங்கள் குறித்து காண்போம்.

Tecno Camon 20 சிறப்பம்சங்கள்

Tecno Camon 20
 • மீடியாடெக் ஹெலியோ G85 சிப்செட்
 • ஆண்ட்ராய்டு 13
 • 64 எம்.பி + 2 எம்.பி ட்ரிப்பிள் கேமரா
 • 32 எம்.பி செல்பி கேமரா
 • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி
 • 5000 mAh பேட்டரி
 • 33W பாஸ்ட் சார்ஜிங்

இந்த மாடல்களில் Tecno Camon 20 மாடலில் மட்டும் 5ஜி கிடையாது. மீத 2 மாடல்களிலும் 5ஜி உண்டு. Predawn Black, Glacier Glow, Serenity Blue ஆகிய மூன்று வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் விலை ரூ.14,999

Tecno Camon 20 Pro 5G சிறப்பம்சங்கள்

Tecno Camon 20 Pro 5G
 • டைமென்சிட்டி 8050 சிப்செட்
 • ஆண்ட்ராய்டு 13
 • 64 எம்.பி + 2 எம்.பி + 2 எம்.பி ட்ரிப்பிள் கேமரா
 • 32 எம்.பி செல்பி கேமரா
 • 8 ஜிபி ரேம், 128 ஜிபி/ 256 ஜிபி மெமரி
 • 5000 mAh பேட்டரி
 • 33W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Tecno Camon 20 Pro 5G ஸ்மார்ட்போன்  Dark Welkin, Serenity Blue ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.19,999. 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.21,999.

Tecno Camon 20 Premier 5G சிறப்பம்சங்கள்

Tecno Camon 20 Premier
 • டைமென்சிட்டி 8050 சிப்செட்
 • ஆண்ட்ராய்டு 13
 • 108 எம்.பி + 50 எம்.பி + 2 எம்.பி ட்ரிப்பிள் கேமரா
 • 32 எம்.பி செல்பி கேமரா
 • 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
 • 5000 mAh பேட்டரி
 • 45W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Tecno Camon 20 Premier 5G ஸ்மார்ட்போன் Dark Welkin, Serenity Blue ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாக உள்ளது. இந்த மாடல் மட்டும் ஜூன் 3வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Tecno Camon 20 சிரிஸில் இதில் மட்டும் கேமரா வசதி சிறப்பாக அமைந்துள்ளது.

Edit by Prasanth.K