1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By siva
Last Updated : வியாழன், 7 அக்டோபர் 2021 (19:32 IST)

டாஸ் வென்ற ராஜஸ்தான்: கொல்கத்தா பேட்டிங்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணியை பஞ்சாப் அணி வீழ்த்திய நிலையில் சற்று முன்னர் இரண்டாவது போட்டிக்கான டாஸ் போடப்பட்டது 
 
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றுள்ளதை அடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து கொல்கத்தா அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணி தொடரில் இருந்து விலகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு மிகக்குறைந்த ரன்ரேட் உள்ளதால் அந்த அணி பிளே ஆப் செல்ல வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கொல்கத்தா அணி இன்று படுமோசமாக தோல்வியடைந்தால் பஞ்சாப் அணி உள்ளே செல்வதற்கு ஒரு வாய்ப்பாகி விடும் என்பதால் கொல்கத்தா அணி மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது