வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 அக்டோபர் 2021 (18:33 IST)

கே எல் ராகுல் அதிரடியால் வெற்றிக்கு அருகில் பஞ்சாப்!

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிக்கு அருகில் உள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து உள்ளன. இதனை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி கேப்டன் கே எல் ராகுலின் அதிரடியால் வெற்றிக்கு மிக அருகில் சென்றுள்ளது. 10 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 92 ரன்களை சேர்த்துள்ளது. கே எல் ராகுல் 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார்.