திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By siva
Last Updated : வியாழன், 7 அக்டோபர் 2021 (19:17 IST)

சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்: பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா?

இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் அந்த அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து 135 என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கே.எல்.ராகுல் 98 ரன்கள் அடித்தார்.
 
இந்த மாபெரும் வெற்றியால் பஞ்சாப் அணியின் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணியின் போட்டியின் முடிவை பொறுத்தே பஞ்சாப் அணியின் பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா என்பது தெரியவரும்.