1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
  4. Dhoni says about to continue in csk team

இனி சிஎஸ்கேவுக்காக விளையாடுவேனா என்பது தெரியாது: தோனி

தோனி
சிஎஸ்கே அணிக்காக இனி விளையாடுவேனா ர்ன்பது எனக்கு தெரியாது என தல தோனி கூறியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில போட்டிகளில் தோனி பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணியில் இருக்க மாட்டார் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில் கூறிய போது அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் உடைகளையே பார்க்கலாம். ஆனால் அதற்காக நான் விளையாடுவேனா விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. 
 
அடுத்த சீசனில் நிறைய மாறுதல்கள் நடக்க உள்ளது. புதிதாக இரண்டு அணிகள் விளையாடுகின்றன. ஒரு வீரரை தக்க வைப்பதற்கான விதிமுறைகளில் என்ன மாற்றங்கள் வரும் என்று எனக்கு தெரியாது என்று தோனி கூறியுள்ளார். தோனியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
அடுத்த கட்டுரையில்
மோதிக்கொள்ளும் கிங்ஸ்: CSK vs PBKS