1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
  4. Prithvi shaw and shivam mavi funny moment viral

என் ஓவர்ல பவுண்டரி அடிக்கிற அளவு திமிறா? – கழுத்தை நெறித்த மாவி, கதறிய ப்ரித்வி ஷா!

IPL
நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டத்தின் முடிவில் கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ப்ரித்விஷா கையை நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஷிவம் மாவி முறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

நேற்றைய ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன.

இதில் முதலாவதாக பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தனர், இரண்டாவதாக களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 16.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங்கின்போது கொல்கத்தா வீரர் சிவம் மாவி ஓவரில் 6 பந்துகளிலும் பவுண்டரிகளாக அடித்து புதிய சாதனை படைத்தார் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் ப்ரித்விஷா. ப்ரித்விஷாவும், ஷிவம் மாவியுன் இந்திய அணியில் விளையாடும் வீரர்களில் மிகவும் நெருக்கமான நண்பர்களும் கூட.. இந்நிலையில் போட்டி முடிந்ததும் “என் ஓவர்லயே பவுண்டரி அடிக்கிறியா?” என செல்லமாக ப்ரித்விஷாவின் கையை முறுக்கி கொண்டு ஷிவம் மாவி கழுத்தை பிடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
என்னால கூட முடியல… சின்னப்பையன் கலக்கிட்டான் – சேவாக்கின் பாராட்டை பெற்ற பிருத்வி ஷா!