ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை..அது என் ஆசீர்வாதம் - ஆஸ்திரேலிய வீரர்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்படாது குறித்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் பாசிட்டிவ் ஆக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்-2021 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெறும் இத்தொடரில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுமார் 30க்கும்மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடிவருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
பிசிசிஐ ஐபிஎல் வீரர்களின் நலனில் கவனம் செலுத்தப்படும் எனக் கூறினார். இருப்பினும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜம்பா, கேன்ரிச்சட்சன் சமீபத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பினர்.
அத்துடன் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்குச் செல்ல விமானச் சேவை மே 15 ஆம் தேது வரை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் லாபஸ்சேன் ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அவர் கூறும்போது, நடப்பு ஐபிஎல்-ல் நான் விளையாடாததை ஆசீர்வாதமாக எடுக்கிறேன். இந்தியாவில் தற்போதைய சூழல் நன்றாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.