திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (19:55 IST)

டாஸ் வென்ற டெல்லி அணி எடுத்த அதிரடி முடிவு!

டாஸ் வென்ற டெல்லி அணி எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடர் போட்டியின் 25வது போட்டி சற்றுமுன் தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது
 
இதனை அடுத்து கொல்கத்தா அணி சற்று முன் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லி அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் நான்கில் வென்று இரண்டில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று நான்கில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே கொல்கத்தா அணிக்கு இன்றைய வெற்றி மிகவும் முக்கியமானதாகும். இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு
 
 
கொல்கத்தா: ரானா, கில், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், சுனில் நரேன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரு ரஸல், பாட் கம்மின்ஸ், ஷிவம் மவி, பிரதிஷ் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி,
 
 
டெல்லி அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், ஹெட்மயர், லலித் யாதவ், அக்சர் பட்டேல், ரபடா, இஷாந்த் சர்மா, அவேஷ் கான்,