செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (23:29 IST)

மும்பை இந்தியன்ஸ் அசத்தில் வெற்றி....கொல்கத்தா போராடி தோல்வி

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 5வது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.

ஏற்கனவே மும்பை அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கியது.

இந்நிலையில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்ததது.

சொற்ப ரன்களில் மும்பை ஆட்டமிழந்ததால் கொல்கத்தா அணிக்கு சாதமாக இப்போட்டி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மும்பை அணி பந்துவீச்சினால் கொல்கத்தாவை மடக்கியது.

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 5 ரன்களுக்கு அவுட் ஆனார். ராணா பொறுப்பாக விளையடி 70 ரன்கள்  அடித்து அணியைக் காப்பாற்றினார். இறுதிக்கட்டத்தில் 4 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரனகள் வேண்டி இருந்தது.  கடைசி ஓவரில் 2  பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது.இதில் ஹர்பஜன் சிங் 2 ரன்கள் எடுத்தார். கடைசிப்பந்தில் ரன் எடுக்கவில்லை.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் சாஹர் 4 விக்கெட்டுகளும், போல்ட் 2 விக்கெட்டுகளும், பாண்டியா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.