அடுத்த போட்டியில் களமிறங்குவாரா அர்ஜுன் டெண்டுல்கர்?

Last Updated: சனி, 10 ஏப்ரல் 2021 (15:07 IST)

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் நேற்று நடந்த முதல் போட்டியில் அவர் களமிறக்கப்படவில்லை.

ஆனால் இனிவரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்து அவரின் திறமைகள் பரிசோதித்து பார்க்கப்படும் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடைசி போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க முடியாது என்பதே காரணம் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :